நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 455 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இன்று  காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்களுள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து வருகை தந்த 98 பேரும் கட்டாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 70 பேரும் அடங்குகின்றனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: