நேற்றைய தினம் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதுளையில் பதிவு


இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 726 கொரோனா தொற்றாளர்களுள் அதிகமானோர் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் 197 கொவிட் நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 116 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 101 பேரும் ஏனைய 312 நோயாளர்கள் நாட்டின் ஏனைய பல மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

No comments: