காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு


கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட 10 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

No comments: