நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை


கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 09 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு - 15 பகுதியை சேர்ந்த 95 வயதான ஆண் ஒரு வர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ரவரி 05ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இதயம் செயலிழந்தமை காரணமாக 2021 பெப்ரவரி 08ம் திகதி உயிரிழந்துள்ளார்.

குருணாகல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக நேற்று  உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுவாசத் தொகுதி செயலிழந்தமை  மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக கடந்த 07ம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு -12 பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் புற்றுநோய் காரணமாக 2021 பெப்ரவரி 07ம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் பக்கவாத காரணமாக 2021 பெப்ரவரி 07ம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஹோரண பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் .மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரத்தம் விஷமானது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் நுரையீரல் புற்று நோய் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

குருதெனிய பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரத்தம் விஷமானது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமை காரணமாக 2021 பெப்ரவரி 01ம் திகதி உயிரிழந்துள்ளார்.

மாவனல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் மாவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரி ழந்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: