நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய தகவல்


நாட்டில் மேலும் 735 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 729 பேர்  திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 06 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 67,850 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 61,461 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: