அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில் அது தொடர்பில் மக்களின் கவனம் குறைவடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பின் போது சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களும் ஏனையவர்களும் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது அதிகளவில் பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதன் முடிவுகள் கிடைக்கப் பெறுவதில் தாமதம் உள்ளதாக  வைத்தியர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாமதத்தினூடாக கொரோனா தொற்று பரவலை தடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: