நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 796 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 74,852ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 67,831 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள  நிலையில், 631 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன்,  இலங்கையில் இதுவரை 390 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: