நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளரர்கள் பதிவு


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 826 பேரில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 132 பேர், கண்டி மாவட்டத்தில் 131 பேர், குருணாகல் மாவட்டத்தில் 78 பேர், களுத்துறை மாவட்டத்தில் 62 பேர், மாத்தளை மாவட்டத்தில் 37 பேர் , காலி மாவட்டத்தில் 29 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

நுவரெலியா மாவட்டத்தில் 20 பேர் , பதுளை மாவட்டத்தில் 15 பேர் , கேகாலை மாவட்டத்தில் 14 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 14 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 10 பேர், மொனராகலை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அம்பாறை, அம்பாந்தோட்டை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: