நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 1087 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து 22 விமானங்கள் மூலம் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: