மாலையர் கட்டில் நிலக்கடலை அறுவடை விழா

செ.துஜியந்தன் 


மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள றணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள மாலையர் கட்டு கிராமத்தில் விவசாய தொழில் நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் மற்றும் சின்னவத்தை கிராமத்தில் அதன் விவசாய போதனாசிரியர் ரீ.குகசோதி ஆகியோரின் தலைமையில் நிலக்கடலை அறுவடை விழா இரு இடங்களில் நடைபெற்றன.

இதில் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.பேரின்பராஜா, தெற்கு வலய உதவி விவசாயப்பணிப்பாளர் ரி.மேகராசா, உட்பட் விவசாயப்போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்

இங்கு விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நிலக்கடலை விதைகள் மீண்டும் விவசாயப் பண்ணையால் நியாய விலையில் கொளவனவு செய்யும் நோக்கில் அறுவடை நிகழ்வ உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு இருபோகத்திலும் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 



No comments: