இதுவரை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில், இதுவரை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 87 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 29ம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 362 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
No comments: