நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது


நாட்டில் மேலும் 940 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 632 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

அத்துடன் 04 பேர் சிறைச்சாலை கொத்தணியில் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 74,056 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6,688 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 66,984 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: