நேற்றைய தினம் 5 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்


கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி,கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ரவரி 09ம் திகதி உயிரிழந்துள்ளார்.

மத்துகமை பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவர். களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 பெப்ரவரி 11ம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 69  வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக 2021 பெப்ரவரி 11ம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு -8 பகுதியைச் சேர்ந்த 59  வயதான ஆண் ஒரு வர் வெலிசறைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சுவாசத்தொகுதி செயலிழந்தமை மற்றும் நுரையீரல் நோய் காரணமாக 2021 பெப்ரவரி 05ம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – 12பகுதியைச் சேர்ந்த 49  வயதான ஆண் ஒருவர் வெலிசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, மற்றும் நுரையீரல் நோய் காரணமாக 2021 ஜனவரி 28ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: