நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 362 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 864 பேரில் 362 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 88 பேர், கண்டி மாவட்டத்தில் 81 பேர், களுத்துறை மாவட்டத்தில் 66 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 45 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 39 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 33 பேர் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 28 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

காலி, மாத்தளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 14 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 12 பேர் , கேகாலை மாவட்டத்தில் 12 பேர், அம்பாறை மாவட்டத்தில் 14 பேர் , பதுளை மாவட்டத்தில் 04 பேர் , பொலன்னறுவை மாவட்டத்தில் 04 பேர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 03 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 02 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

மொனராகலை, புத்தளம் , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 27 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: