கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரிப்பு


கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 07 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மக்கொன பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் வட கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அங்கொட தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 பெப்ரவரி 03ம் திகதி உயிரிழந்துள்ளார்.

வேஉட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, மாரடைப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக 2021 பெப்ரவரி 03ம் திகதி உயிரிழந்துள்ளார்.

கடுகஸ் தொட்ட, பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 பெப்ரவரி 03ம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

பியகம பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக 2021 பெப்ரவரி 02ம் திகதி உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல – போதரகந்த பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று, மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக 2021 பெப்ரவரி 01ம் திகதி உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: