24 மணித்தியாலத்தில் 14 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

பாதுகாப்பு முகக் கவசம்  அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை  கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான  காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்  3,121  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: