நேற்றைய தினம் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்


நேற்றைய தினம் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 802 பேரில் 238 கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என  தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 162 பேர், களுத்துறை மாவட்டத் தில் 68 பேர் ,இரத்தினபுரி மாவட்டத்தில் 45 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 39 பேர், குருணாகல் மாவட்டத்தில் 38 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 38 பேர், கண்டி மாவட்டத்தில் 32 பேர், மாத்தறை மாவட்டத்தில் 25 பேர் , கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 14 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 13 பேர் , கேகாலை மாவட்டத்தில் 13 பேர், அம்பாறை மாவட்டத்தில் 12 பேர், மன்னார் மாவட்டத்தில் 11 பேர், வவுனியா மாவட்டத்தில் 10 பேர், மொனராகலை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 03 பேர் , அம்பாந்தோட் டை மாவட்டத்தில் 03 பேர்,பதுளை மாவட்டத்தில் 03 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 02 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 02 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: