நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பொது சுகாதார பிரிவு பகுதியில் 22 பேருக்கு கொரோனா
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி வெஸ்டோல் தமிழ் வித்தியால மாணவர்கள் 15 பேர் ,ஆசிரியர் ஒருவர் மற்றும் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பொது சுகாதார காரியாலயத்தில் பணிபுரியும் 06 பேர் உட்பட 22 பேருக்கு இன்று (07) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பஸ்பாகே கோரளை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (6) மாலை வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக குறித்த 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி நடவடிக்கையினை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணிவந்த 112 பேருக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தொற்றுக்குள்ளான 22 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: