ஏப்ரல் 21 தாக்குதல் - சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை


ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கையை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: