2020 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை


2020ம் ஆண்டிற்கான தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்குரிய நேர்முக பரீட்சை எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளிலும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக பரீட்சைக்குரிய கடிதங்கள் உரிய கல்வியியல் கல்லூரிகளினூடாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: