கொரோனா தொற்றினால் 18 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு - முழு விபரம்


நாட்டில்  மேலும் 7 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகின. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெலிகம பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் கடந்த 29ம் திகதி கொரோனா நிமோனியா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் கொழும்பு -15 ஐச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் கடந்த 31ம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், உயர் இரத்த அழுத்தம்  மற்றும் கடுமையான நீரிழிவு நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் பிம்புர மாவட்ட வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், இரத்தம் குறைவடைந்தமை நீரிழிவு மற்றும் இருதய நோய் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கெலிஒய பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று ஆகிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 18 மாதங்களான ஆண் குழந்தை ஒன்று லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தையின் மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, ராகமை பகுதியைச்சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், உயர் குருதி அமுக்கம் மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்மை குறிப்பிடத்தக்கது.

No comments: