பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கு கொரோனா


பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களில் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே குறித்த 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: