நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், வக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், வெலிமட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தும்மலசூரிய பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments: