கொரோனா நோயாளர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் ஆலோசனைக் கோவை - சுகாதார அமைச்சு


கொரோனா நோயாளர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனைக் கோவை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதாவது,COVID – 19 தொற்றுக்குள்ளானவர்களின் பிறபொருளெதிரி அழிவடைந்திருந்தால் அதனை தனிமைப்படுத்தலின் போது மீளுருவாக்க முடியும்.

நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்களை தனிமைப்படுத்தி, முன்னேற்றம் ஏற்பட்டால் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு 10 நாட்களின் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து விடுவிக்க முடியும்.

அவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வௌியேறியவர்கள் மேலும் 4 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

முதியோர் இல்லங்கள், ஹோட்டல் மற்றும் சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்கள் 10 ஆவது நாளின் பின்னர் 4 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: