நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 261 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.

அதன்படி,இந்தியாவிலிருந்து 29 பேர், கட்டாரிலிருந்து 30 பேர், ஜப்பானிலிருந்து 45 பேர் , அவுஸ்திரேலியாவிலிருந்து 157 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தவிர மேலும் 365 பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.

அதன்படி, உக்ரைனிலிருந்து 159 பேர், மாலைத்தீவிலிருந்து 30 பேர், இத்தாலியிலிருந்து 32 பேர், பங்களாதேஷிலிருந்து 10 பேர், மலேசியாவிலிருந்து 05 பேர், தென்னாப் பிரிக்கா விலிருந்து 35 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸி லிருந்து 75 பேர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 19 பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments: