நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 787 பேரில் 139 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 108 பேர், கொழும்பு மாவட்டத்தில் 101 பேர், களுத்துறை மாவட்டத்தில் 66 பேர், குருணாகல் மாவட்டத்தில் 65 பேர், காலி மாவட்டத்தில் 61 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 45 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 39 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 23 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அம்பாறை மாவட்டத்தில் 18 பேர் , அம்பாந்தோட்டை 14 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பேர், புத்தளம் மாவட்டத்தில் 11 பேர், மொனராகலை மாவட்டத்தில் 11 பேர் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 பேர் ,கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 07 பேர் , மன்னார் மாவட்டத்தில் 06 பேர் , வவுனியா மாவட்டத்தில் 05 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேர், பதுளை மாவட்டத்தில் 03 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 03 பேர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

No comments: