அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 900ஐ அண்மித்த அளவில் தொற்றாளர்கள் பதிவாகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதே நிலைமை தொடருமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.

எனவே நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொருத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியாக இருக்கக் கூடாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: