மட்டக்களப்பில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

கனகராசா சரவணன் 


மட்டக்களப்பில் நீண்டகாலமாக போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ஏறாவூர், செங்கலடி  பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைவஸ்துடன்  மட்டக்களப்பு நகரில் வைத்து கைது செய்துள்ளதுடன் இரு முச்சக்கரவண்டிகளையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தெரிவித்தார்.

பொலிஸ் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய  சம்பவதினமான நேற்று (03) ஏறாவூரைச் சேர்ந்த ஒரு வியாபாரியிடம் தொடர்பு கொண்டு போதைவஸ்து வாங்கவுள்ளதாக அவரை மட்டக்களப்பு நகர்பகுதிக்கு போதைவஸ்து வாங்குவது போல நடித்து அவரை மட்டக்களப்பு திருகோணமலை வீதிக்கு வரவழைத்தனர் இதன்போது முச்சக்கரவண்டி சாரதியை மடக்கிப்பிடித்தது கைது செய்ததுடன் அவரிடம் இருந்து போதைவஸ்தையும் மீட்டனர் 

அதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர் வழங்கிய தகவலுக்கமைய ஏறாவூரைச் சேர்ந்த இன்னுமொரு போதைவஸ்து வியாபாரியயை போதைவஸ்து வாங்கவேண்டும் என அவரையும் வரவழைத்து அவரை மடக்கிப்பிடித்தது கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஹரோயின் போதைவஸ்தை மீட்டனர்  

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் ஏறாவூர் மிச்சுநகர், செங்கலடி பிரதேசத்தைச் சேர்நத முச்சக்கரவண்டி சாரதிகள் எனவும் எனவும் நீணடகாலமாக போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருபர்கள் எனவும்,கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 



No comments: