மேல் நீதிமன்ற செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பம்


உயர் நீதிமன்றத்தின் புதிய ஆண்டுக்கான செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அத்தியாவசியமான நபர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும், அதிகாரிகளை ஒருங்கிணைக்கவும் காணொளி தொழிநுட்பத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: