கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 737 பேரில் 227 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 102 பேர், கம்பஹா மாவட்டத்தில் 96 பேர், காலி மாவட்டத்தில் 68 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 59 பேர் ,கண்டி மாவட்டத்தில் 47 பேர் , கேகாலை மாவட்டத்தில் 26 பேர், மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 21 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

புத்தளம் மாவட்டத்தில் 18 பேர், மாத்தறை மாவட்டத்தில் 16 பேர்,இரத்தினபுரி மாவட்டத்தில் 15 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 12 பேர் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அம்பாறை மாவட்டத்தில் 07 பேர் , அனுராதபுர மாவட்டத்தில் 05 பேர் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் 03பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

வவுனியா, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட் டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: