சுகாதார விதிமுறைகளுக்கமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்


சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திட்டமிடப்பட்டவாறு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 2 முதல் 13 வரையான வகுப்புகளுக்காக எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தரம் 11 இற்கான கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக, சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வை மற்றும் அறிவுரைகளுக்கு அமைய அவர்களது வழிகாட்டல்களின் படி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார ரீதியிலான பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பாடசாலை சுகாதாரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: