நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் மேலும் 787 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 784 பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 56,863 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 7,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 48,617 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தற்போது நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: