நாட்டின் இன்றைய வானிலை


நாட்டில் சில பகுதிகளில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை வழமைக்குத் திரும்பக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை வழமைக்குத் திரும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் சிறிய அளவில் மழை பொழியக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments: