நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 755 பேரில் 369 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,கம்பஹா மாவட்டத்தில் 124 பேர்,களுத்துறை மாவட்டத்தில் 80 பேர், குருணாகல் மாவட்டத்தில் 29 பேர் , கண்டி மாவட்டத்தில் 23 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 22 பேர் , காலி மாவட்டத்தில் 18 பேர் , மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 17 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 15 பேர் , அனுராதபுர மாவட்டத்தில் 14 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 06 பேர் , பொலன்னறுவை மாவட்டத்தில் 06 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 05 பேர் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

வவுனியா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேர் அடங்கலாக நேற்றை தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


No comments: