கொக்கட்டிச்சோலை பகுதியில் ஊஞ்சல் துணியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு


மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் ஊஞ்சல் துணியில் சிக்கி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, நேற்று பகல் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மகிழடித்தீவு பகுதியை சேர்ந்த 9 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: