மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன் - கினிகத்தேனையில் சம்பவம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை அம்பகமுவ மாபொத்தன பகுதியில் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவனை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (28) மாலை வேளையில் கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 27ம் திகதி புதன்கிழமை இரவு மனைவியின் கழுத்து பகுதியை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு அவருடைய இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு வீட்டினை பூட்டிவிட்டு,தான் தனது மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு வந்துள்ளதாக தனது சகோதரனிடம் கூறிய பின் குறித்த சகோதரன் பூட்டப்பட்டிருந்த வீட்டினை திறந்து பார்க்கையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தபோது, சம்பவத்தில் பலியான பெண்ணுக்கும் வேறு ஒரு நபருக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்து வந்ததாகவும் இந்த விடயத்தினை அறிந்த பெண்ணின் கணவன் பலமுறை  தமது மனைவிக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.

27ம் திகதி காலை வேளையில் , கள்ளத் தொடர்பு கொண்ட நபர்  குறித்த பெண்ணை  நாவலப்பிட்டி பகுதிக்கு முச்சக்கரவண்டியில் அழைத்து சென்ற போது, அவர்களை பின் தொடர்ந்த கணவன் நாவலப்பிட்டி பகுதியில் வைத்து இருவரையும் தாக்கி முச்சக்கர வண்டியினையும் சேதப்படுத்தி வீட்டை வந்தடைந்துள்ளார்.

அன்றைய தினம் வீடு வந்த மனைவி, கணவனை கொலை செய்வதற்கு கத்தியை கையில் எடுத்த போது அதனை கண்ட கணவன் ஆத்திரமடைந்து மனைவியைின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாகவும் கொலை செய்யப்பட்ட பெண் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என  கினிகத்தேனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்  இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரைவழைக்கபட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மரண விசாரனைகள் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் தலமையில் இடம் பெற்றதுடன்,சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட நபரை (கணவன்)  ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: