நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 737 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 59,167 ஆக  அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 50,337 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்,நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 287 ஆக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: