62 பயணிகளுடன் மாயமான இந்தோனேசிய விமானம் - கடலில் விழுந்ததாக தகவல்


இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து நேற்று (சனிக்கிழமை) புறப்பட்டு சில நிமிடங்களிலே மாயமாகி விபத்துக்குள்ளானதாக கருதப்படும் போயிங் 737 பயணிகள் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.

இந்நிலையில் குறித்த விமானம் கடலில் வீழ்வதை அவதானித்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளதோடு,மேலும் சில கடற்றொழிலாளர்களும் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து கடற்படையினர் விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: