கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் 6வது நாளாகவும் தொடரும் தனிமைப்படுத்தல்

 எஸ்.அஷ்ரப்கான்


கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் 6 வது நாளாகவும் தொடரும் தனிமைப்படுத்தல் நிலைமையினால் குறித்த 11 கிராம சேகர் பிரிவு பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (28) இலிருந்து  6 வது நாளாகவும் கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தொடர்ந்தும் இவ்வாறு இன்றும் குறித்த பிரதேசம் முடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த இப்பிரதேசத்தில் உள்ள பொதுப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இங்குள்ள பொதுச் சந்தை, கடைகள், பள்ளிவாயில்கள், பொது நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதுடன் உள்ளுர் வீதிகளும்  வீதித்தடைகள் போடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்ககையில் ஈடுபடுவதனால் மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

மேலும் இது விடயமாக சுகாதாரத்துறையினர் குறிப்பிடும்போது, தொற்றாளர்கள்  மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுமாக இருந்தால் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் அனுதியோடு கல்முனை மாநகரத்தின் சகல பகுதிகளையும் முடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments: