இன்று அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகள் இன்று அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்– 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம் பொலிஸ் பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்கடை மேற்கு, புதுக்கடை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள், பொரளை பொலிஸ் பிரிவின் வணாத்தமுல்லை கிராம சேவகர் பிரிவு மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவின் தமிழ் தோட்டம் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடை பொலிஸ் பிரிவின் பேலியகொடைவத்தை, மீகஹவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவின் ரோஹண விகாரை மாவத்தை, பேலியகொடை கங்கபட கிராம சேவகர் பிரிவின் நெல்லிகஹவத்தை, பூரணகொடவத்தை ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் விலேகொட வடக்கு – கிராம சேவகர் பிரிவின் ஶ்ரீ ஜெயந்தி மாவத்தை பகுதியிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக கொவிட்– 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர்,இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக சவேந்திர சில்வா  மேலும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி – பூஜாபிட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கொஸ்கோட்டை கொலனிக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் 31 கொவிட்-19 தொற்று உறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


No comments: