முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட நபர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன்ட் பரிசோதனைகள் - இதுவரை 46 பேருக்கு கொரோனா தொற்று


மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட 121 பேர், நேற்றைய தினம் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன்ட் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்..

முகக் கவசங்களை அணியாத நபர்களை கொவிட் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை, கடந்த 5ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 5ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2334 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இதற்கமைய, அவர்களில் ஆயிரத்து 313 பேர் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 19 பேர் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆயிரத்து 21 பேர் இதுவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 27 பேர் இதுவரை தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், இதுவரை 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: