நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 313 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 859 பேரில் 313 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 211 பேர், குருணாகல் மாவட்டத்தில் 79 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 78 பேர், புத்தளம் மாவட்டத்தில் 47 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 20 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 22 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 20 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

கேகாலை மாவட்டத்தில் 19 பேர், காலி மாவட்டத்தில் 17 பேர், மாத்தளை மாவட்டத்தில் 11 பேர், இரத்தினபுரி மாவட் டத்தில் 09 பேர் , கண்டி மாவட்டத்தில் 05 பேர், பொலனறுவை மாவட்டத்தில் 04 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 02பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: