நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 298 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 892 பேரில் 298 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 203 பேர், கண்டி மாவட்டத்தில் 56 பேர், களுத்துறை மாவட்டத்தில் 42 பேர், குருணாகல் மாவட்டத்தில் 37 பேர் , இரத்தினபுரி மாவட்டத்தில் 37 பேர் , அனுராதபுர மாவட்டத்தில் 36 பேர், மாத்தறை மாவட்டத்தில் 35 பேர், காலி மாவட்டத்தில் 34 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 14 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

நுவரெலியா மாவட்டத்தில் 11 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 11 பேர், கேகாலை மாவட்டத்தில் 10 பேர், புத்தகம் மாவட்டத்தில் 08 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 07 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

மொனராகலை மாவட்டத்தில் 03 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 02 பேர் , பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 40 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: