நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு


கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இராகமை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் வெலிசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்தம் விஷமானது மற்றும் அதிர்ச்சி காரணமாக 2021 ஜனவரி 26ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: