நேற்றைய தினம் 25 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் 25 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 887 பேரில் 337 பேர் கொ ழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 136 பேர், களுத்துறை மாவட்டத்தில் 71 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 51 பேர், கண்டி மாவட்டத்தில் 49 பேர், காலி மாவட்டத்தில் 47 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 33 பேர், அம்பாறை மாவட்டத்தில் 29 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 25 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

பொலன்னறுவை மாவட்டத்தில் 21 பேர் , மாத்தறை மாவட்டத்தில் 19 பேர் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேர், அனுதாபுர மாவட்டத்தில் 07 பேர் , கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

கேகாலை மாவட்டத்தில் 04 பேர், வவுனியா மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 02 பேர், நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்ட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 14 பேர் அடங்கலாக நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: