மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது


மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த மாதம் 20ம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 1,824 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: