கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 09 பேர் உயிரிழப்பு


நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 90 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2,045 பேர் குடிபோதையில் வாகன செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: