தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 23 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிசெயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 2 மாத காலப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை 2044 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.




No comments: