நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 226 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 532 பேரில் 226 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 72 பேர்,கம்பஹா மாவட்டத்தில் 50 பேர்,காலி மாவட்டத்தில் 46 பேர்,களுத்துறை மாவட்டத்தில் 31 பேர், கேகாலை மாவட்டத்தில் 16 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பேர், மாத்தறை மாவட்டத்தில் 15 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 14 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 12 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 08பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 08 பேர், மாத்தளை மாவட்டத்தில் 05 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 03 பேர்,  நுவரெலியா மாவட்டத்தில் 02 பேர் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்,வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


 

No comments: