முகக் கவசம் அணியாமல் இருந்த 220 பேருக்கு அன்டிஜன்ட் பரிசோதனை - 3 பேருக்கு தொற்றுறுதி


மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாத நபர்களை அடையாளம் காண மேற்கொண்ட விசேட சுற்றிவளைப் பின் போது 377 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 220 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன்ட் பரிசோதனைகளில் 3 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 157 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது அதன் அறிக்கைகள் கிடைக்கப் பெறவுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன் படி முகக் கவசம் அணியாத நிலையில், மேல் மாகாணத்தில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: